அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும்


அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Jan 2022 8:29 PM GMT (Updated: 26 Jan 2022 8:29 PM GMT)

டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம்:
டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
ஆலோசனை கூட்டம் 
கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் வன்னியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பா.ம.க. மாவட்டத் தலைவர் திருஞானம்பிள்ளை தலைமை தாங்கினார். இதில் உழவர் பேரியக்கம் மாநில தலைவர் கோ.ஆலயமணி, தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், 
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள் போட்டியிடுவது. 
நெல்கொள்முதல் நிலையங்கள்
சம்பா அறுவடை பணி தொடங்கியதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் கோதை கேசவன், இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் வினோத் சுந்தரம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதிவிமல், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், உழவர் பேரியக்கம் மாநில துணைத்தலைவர் மண்டபம் கலியமூர்த்தி உள்ளிட்ட கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story