ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 322 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 322 கவுன்சிலர் பதவிகளுக்கு 15 லட்சத்து 73 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 322 கவுன்சிலர் பதவிகளுக்கு 15 லட்சத்து 73 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர்.
நகர்ப்புற தேர்தல்
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலம் மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 838 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மதுரை மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 322 கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 15 லட்சத்து 73 ஆயிரத்து 289 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆயிரத்து 615 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கவுன்சிலர்கள் தேர்தலுக்கு பிறகு மதுரை மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் மாதம் 4-ந் தேதி நடக்கிறது.
மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. அதில் 50 வார்டுகளும், மேயர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்கள் பொது பிரிவிற்கு வார்டுகள் 1, 2, 4, 5, 6, 8, 10, 12, 14, 15, 17, 20, 22, 26, 28, 32, 33, 34, 35, 42, 44, 45, 46, 47, 48, 50, 51, 54, 55, 56, 57, 60, 61, 69, 70, 75, 78, 79, 85, 86, 89, 94, 95, 96, 97, 98 ஆகியவையும், ஆதிதிராவிடர்கள் பெண்கள் பிரிவிற்கு வார்டுகள் 30, 59, 88, 100 ஆகியவையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆதிதிராவிடர்கள் பொது பிரிவிற்கு 31, 71, 77 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 13 லட்சத்து 39 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆயிரத்து 317 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3 நகராட்சிகள்
மதுரை மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 நகராட்சிகள் உள்ளன. அதில் மொத்தம் 78 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இங்கு மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 151 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 133 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் மேலூரில் 27 கவுன்சிலர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு வார்டு 4-ம், ஆதிதிராவிடர் பெண்களுக்கு வார்டுகள் 11, 21-ம், பெண்கள் பொது பிரிவினருக்கு வார்டுகள் 3, 5, 6, 10, 13, 15, 16, 18, 20, 22, 24, 26 ஆகியவையும் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமங்கலம் நகராட்சியில் 27 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு வார்டு 9-ம், ஆதிதிராவிடர் பெண்களுக்கு வார்டு 16-ம், பெண்கள் பொது பிரிவினருக்கு வார்டுகள் 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 23, 24, 25 ஆகியவையும் ஒதுக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி நகராட்சியில் 24 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு வார்டு 24-ம், ஆதிதிராவிடர் பெண்களுக்கு வார்டு 15-ம், பெண்கள் பொது பிரிவினருக்கு வார்டுகள் 1, 3, 7, 9, 10, 11, 12, 13, 14, 21, 22 ஆகியவையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
9 பேரூராட்சிகள்
மதுரை மாவட்டத்தில் அ.வெள்ளாளபட்டி, அலங்காநல்லூர், எழுமலை, பாலமேடு, பரவை, பேரையூர், சோழவந்தான், டி.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 144 கவுன்சிலர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 165 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
------------
Related Tags :
Next Story