வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது


வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 3:59 PM IST (Updated: 27 Jan 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் 2-வது பிரதான சாலையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றப்படுவதை அப்பகுதி மக்கள் கண்டனர்.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணையில், ரேஷன் கடை ஊழியர் கோமதி உதவியுடன் 2 டன் அரிசி மூட்டைகள் வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கோமதி, ராஜேந்திர பாண்டியன், பொன்சங்கர நாராயணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சஞ்சீவியை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story