ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு


ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 27 Jan 2022 3:06 PM GMT (Updated: 27 Jan 2022 3:06 PM GMT)

தேனி ரெயில் நிலையத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி.ஆய்வு செய்தார்.

தேனி:

மதுரை-போடி இடையே அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில், மதுரையில் இருந்து தேனி வரை ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இந்த ரெயில்பாதையில், ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் வருகிற 31-ந்தேதி ஆய்வு செய்ய உள்ளனர். 

இந்தநிலையில் தேனி ரெயில் நிலையத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி., ரெயில்வே கூடுதல் நிர்வாக பொறியாளர் சரவணன், முதன்மை மின் பொறியாளர் ராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ெரயில் நிலையத்தில் நடந்துவரும் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் உயர்மின் கோபுர வழித்தட மாற்றுப் பணிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். 

ஆய்வின்போது, மின் தொடரமைப்பு கழக உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர். 

இந்த ஆய்வை தொடர்ந்து ப.ரவீந்திரநாத் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், "ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள உயர்மின் கோபுரங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு ரெயில் இயக்கப்படும். பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து தொடர்பாக தலைமைக்கழகம் முடிவு எடுக்கும்" என்றார். 

ஓ.பன்னீர்செல்வம் மீதும், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதும் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் கருத்து சொல்ல முடியாது" என்றார்.

Next Story