ஆசிரியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்


ஆசிரியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2022 10:29 PM IST (Updated: 27 Jan 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கல்வி அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலாடி வட்டார பள்ளிகளில் பணிபுரியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள கடலாடி வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டிருந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த கலந்தாய்வு இரவு 8 மணிவரை நடக்கவில்லை.இதனால் ஆசிரியர்கள் அலைக்கழிப்புக்கு ஆளானார்கள். இரவு 8 மணிக்கு மேல் கலந்தாய்வு கிடையாது என்று அறிவித்ததால் காலையில் இருந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்று காத்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திர மடைந்த ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தை விட்டு வெளியேறாமல் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். கல்வி அதிகாரிகளையும் அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story