திமுக தொண்டர் வெட்டிக்கொலை


திமுக தொண்டர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 27 Jan 2022 5:02 PM GMT (Updated: 27 Jan 2022 5:02 PM GMT)

அன்னூரில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க. தொண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னூர்

அன்னூரில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க. தொண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

முன்விரோதம்

கோவை மாவட்டம் அன்னூர் நாகம்மாபுதூரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் சரவணசுந்தரம் (வயது 19). இவர் சீட்டு நடத்தி வந்ததுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். 

இவருக்கும் பிள்ளை யப்பம்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான தமிழ்ச் செல் வனுக்கும் (26) இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக  தகராறு ஏற்பட்டது. அது முன்விரோதமாக மாறியது. 

இந்த நிலையில் சரவணசுந்தரம் அன்னூர் அருகே உள்ள  மைல்கல் பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பரான ராஜராஜன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

சரமாரியாக வெட்டினார்கள்

பின்னர் 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவா ளால் சரவணசுந்தரத்தை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் தப்பி ஓடினார். இருந்தபோதிலும் அவரை விரட்டி விரட்டி வெட்டி னார்கள். இதில் அவருக்கு தலை உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்தது. 

2 பேரும் சேர்ந்து சரவணசுந்தரத்தை சூழ்ந்து கொண்டு வெட்டியதால் அவர்களுக்கும் கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார்.

பரிதாப சாவு

இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணசுந்தரத்தை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் சரவணசுந்தரத்தை வெட்டிய தமிழ்ச்செல்வன், ராஜராஜன் ஆகியோர் அன்னூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ராஜராஜன் இந்து முன்னணியை சேர்ந்தவர் ஆவார். 

தி.மு.க. தொண்டர்

கொலை செய்யப்பட்ட சரவணசுந்தரம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தி.மு.க.வில் இணைந்து உள்ளார். கடந்த சில நாட்க ளாகவே அவர் தனது நண்பர்களிடம் தமிழ்ச்செல்வனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி உள்ளார். அத்துடன் இது தொடர்பாக அவர் தனது வீட்டில் கடிதமும் எழுதி வைத்து உள்ளார். 

இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அவர் எழுதிய கடிதத்தை அன்னூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சரவணசுந்தரம் குடும்பத் தினர் மற்றும் நண்பர்கள் நேற்று மாலை அன்னூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சரவணசுந்தரம் கொலைக்கு காரணமாக இருந்த முக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்தனர்.

 இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story