தண்ணீரில் மிதந்து மாணவர் சாதனை


தண்ணீரில் மிதந்து மாணவர் சாதனை
x
தினத்தந்தி 27 Jan 2022 5:17 PM GMT (Updated: 27 Jan 2022 5:17 PM GMT)

தண்ணீரில் மிதந்து மாணவர் சாதனை படைத்துள்ளார்.

கீழக்கரை, 
கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த இம்பாலா சுல்தான் மகன் இன்ஷாப் முகமது (வயது 11). கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்தகத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்பு கேரளாவை சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்தார். அதனை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 வினாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார். இந்த மாணவரை பாராட்டும் வகையில் கபீர் சாகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு விளையாட்டு துறையில் சிறந்த இளம் சாதனையாளர் விருதை குடியரசு தினத்தன்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் வழங்கினார்.  இன்ஷாப் முகமதை கவுரவிக்கும் வகையில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ஷேக் மன்சூர், கீழக்கரை தாசில்தார் முருகேசன், மாவட்ட டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம், அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு செயலாளர் ஷேக் ஹூசைன், நூரானியா நர்சரி பள்ளி தாளாளர் பரிதா சுபேர், முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் பாதுஷா, கீழக்கரை இன்ஸ்பெக்டர் முரளி பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.  இதுகுறித்து இன்ஷாப் முகமது கூறுகையில், கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருவதாகவும்.மேலும் நமது மாநில அரசு எனக்கு வாய்ப்புகள் வழங்கினால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுப்பதே எனது லட்சியம் என்று கூறினார்.

Next Story