தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Jan 2022 5:28 PM GMT (Updated: 27 Jan 2022 5:28 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறை தொடர்பான செய்தி வருமாறு:-

வீணாகும் குடிநீர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் கரியாப்பட்டினம் சாருமடை கடைத்தெரு சாலையில் கடந்த ஒரு மாத காலமாக கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் தென்னம்புலம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் உள்ள அடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                                                                                                   -கவுதமன், சாருமடை கடைத்தெரு.

Next Story