மாவட்ட செய்திகள்

பூதப்பாண்டி அருகே ஓட்டலில் மின்சாரம் பாய்ந்து சமையல் மாஸ்டர் பரிதாப சாவு + "||" + The tragic death of the cooking master of the electric current

பூதப்பாண்டி அருகே ஓட்டலில் மின்சாரம் பாய்ந்து சமையல் மாஸ்டர் பரிதாப சாவு

பூதப்பாண்டி அருகே ஓட்டலில் மின்சாரம் பாய்ந்து சமையல் மாஸ்டர் பரிதாப சாவு
பூதப்பாண்டி அருேக ஓட்டலில் மின்சாரம் பாய்ந்து சமையல் மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
அழகியபாண்டியபுரம், 
பூதப்பாண்டி அருேக ஓட்டலில் மின்சாரம் பாய்ந்து சமையல் மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சமையல் மாஸ்டர்
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது35), சமையல் மாஸ்டர். இவருக்கு மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கார்த்திக் குமரி மாவட்டத்தில் திட்டுவிளை பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இதற்காக பூதப்பாண்டி பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
மின்சாரம் பாய்ந்தது
நேற்று முன்தினம் கார்த்திக் வழக்கம் போல் ஓட்டலில் வேலைக்கு சென்றார். அங்கு தோசைக்கு மாவு அரைப்பதற்கு கிரைண்டரில் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் உடல் முழுவதும் கருகிய நிலையில் மயங்கி கிடந்தார். 
இதை பார்த்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டு பூதப்பாண்டியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல்                  தெரிவிக்கப்பட் டது. போலீசார் விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓட்டலில் மின்சாரம் பாய்ந்து சமையல் மாஸ்டர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.