சாத்தனக்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

சாத்தனக்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
ராயக்கோட்டை:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அ.மல்லாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 26), ஆட்டோ டிரைவர். பி.செட்டிஅள்ளி மாரிகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இவருடைய பெரியப்பா சின்னசாமியின் மகன் பொக்லைன் சதீஷ் (25), பொக்லைன் ஆபரேட்டர். ஆனந்தனின் ஆட்டோவில் அவருடன் சதீசும் சேர்ந்து அ.மல்லாபுரத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுகோட்டா பக்கமுள்ள பழத்தோட்டத்தில் சப்போட்டா பழம் வாங்கி வந்து பழம் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
நேற்று வழக்கம்போல ஆட்டோவில் சாத்தனக்கல் சிறிய பாலம் அருகே வரும்போது நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆனந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சதீஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதே ஆட்டோவில் ஆனந்தனை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story