சிறுவனின் வேண்டுதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்


சிறுவனின் வேண்டுதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
x
தினத்தந்தி 27 Jan 2022 7:45 PM GMT (Updated: 27 Jan 2022 7:45 PM GMT)

சிறுவனின் வேண்டுதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பெரம்பலூர்:
சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு சிறுவன், கோவிலில் வைத்து பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் கோவிலில் முருகப்பெருமான் சிலை முன்பு படுத்து கிடந்தபடி கைகளை அசைத்து குரலை உயர்த்தி பேசுகையில், பள்ளிக்கு சென்றால் வர்றவங்க, பசங்க எல்லாம் என்னை அடிக்கிறாங்க முருகா. எனக்கு நடந்த கொடுமையெல்லாம் நீயே கேளு முருகா. எங்க சாரு ஒருத்தர் ஏ.பி.சி.டி. எத்தனை வார்த்தைனு கேட்டாரு. ஏ.பி.சி.டி. மொத்தம் நான்கு எழுத்து என்று சொன்னேன். அதற்கு அந்த அடி அடிச்சாரு. ஒன்னு அந்த ஸ்கூல்ல நான் இருக்க வேண்டும், இல்ைல அந்த சார் இருக்க வேண்டும். எனக்காக ஒன்று மட்டும் பண்ணு முருகா என்று கேட்டதை தொடர்ந்து, இரு முருகா பக்கத்துல வந்துறேன் என்று கூறி முருகன் சிலைக்கு அருகே சென்ற அந்த சிறுவன், என்னை அடிச்ச சாருக்கு கொரோனா வர வைச்சிரு முருகா என்று வேண்டுதல் செய்தது போன்று பதிவாகியிருந்தது. இந்த வீடியோவில் சிறுவனின் பேச்சு சிரிப்பை ஏற்படுத்தினாலும், அந்த சிறுவன் ஆசிரியருக்கு கொரோனா வர வேண்டும் என்று பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த வீடியோ பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story