நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 27 Jan 2022 7:52 PM GMT (Updated: 27 Jan 2022 7:52 PM GMT)

வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

சிவகாசி, 
வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. 
வெம்பக்கோட்டை 
சிவகாசி கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சாத்தூர், கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 
இதற்காக இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, சல் வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்தி நாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 
அன்பின்நகரம் 
இதே போல் கிருஷ்ணாபுரம், கீழ செல்லையாபுரம், கோவில்செல்லையாபுரம், சாணாகுளம், ஊத்துப்பட்டி, ரெட்டியபட்டி, ஏழாயிரம்பண்ணை, வெள்ளையாபுரம், பனையடிப்பட்டி, புல்லகவுண்டன்பட்டி, எலுமிச்சங்காய்பட்டி, அன்பின்நகரம், மரக்நாதபுரம், தூங்காரெட்டியாபட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங்குடி, மேலபுதூர், ந.சுப்பையா புரம், நள்ளி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பெத்து ரெட்டியபட்டி, கரிசல்பட்டி, இ.ரெட்டியபட்டி, மேட்டமலை, படந்தால், கெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர் பாளையம், பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி ஆகிய பகுதிகளிலும் நாளை  காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 
ேமற்கண்ட தகவலை மின்வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் பாவநாசம் கூறினார். 
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, வேலாயுதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 
ஆதலால் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி மில், வெம்பூர், பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை  மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.

Next Story