வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலி; 3 பேர் படுகாயம்


வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலி; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:08 PM GMT (Updated: 27 Jan 2022 9:08 PM GMT)

ஏழாயிரம்பண்ணை அருகே மராமத்து பணியின் போது வீடு இடிந்து விழுந்து ெதாழிலாளி பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.

தாயில்பட்டி, 
ஏழாயிரம்பண்ணை அருகே மராமத்து பணியின் போது வீடு இடிந்து விழுந்து ெதாழிலாளி பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். 
மராமத்து பணி 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையை அடுத்த  கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த தூங்காரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் (வயது 57) என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டில் மராமத்து பணிக்கான கட்டுமான வேலை நடைபெற்று வந்தது. இந்த பணியில் 5-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். 
இந்தநிலையில் கட்டிட பணி நடந்தபோது வீட்டின் சுவர் திடீரென்று விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் அதில் இடிபாடுகளில் சிக்கி ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த தொழிலாளி முருகன்(50), முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகநாத பாண்டியன்(46), கார்த்தி(25), மணிகண்டன்(24) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளி பலி 
தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  இதில் முருகன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் பாபு முருகன் மற்றும் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் சண்முகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Related Tags :
Next Story