பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதார பணிகள் தீவிரம்


பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதார பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:57 PM GMT (Updated: 27 Jan 2022 9:57 PM GMT)

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள்

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
11 வயது சிறுமி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாபேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர் ந்தவர் மகாராஜன். இவரது மனைவி செல்லம்மாள். இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளி ஆவர். இவர்களது மகள் ஷைனி (வயது 11). இவள் ஆவுடையானூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் ஷைனிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக சிறுமியின் பெற்றோர் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ஷைனியை பரிசோதித்த டாக்டர், டெங்கு காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம் என்று தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர்.
டெங்கு காய்ச்சலுக்கு பலி
பின்னர் ஷைனி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
அங்கு டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி ஷைனி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.
சுகாதார பணிகள்
இதைத்தொடர்ந்து அருணாபேரி பகுதியில் பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் புகை மருந்து அடித்தல், தண்ணீரில் கொசுப்புழுக்களை அழித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.

Next Story