குடியரசுதின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

குடியரசுதின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
எஸ்.புதூர்,
குடியரசு தின விழாவில் சிவகங்கை மாவட்டத்தின் வீரத்தை அடையாளம் காட்டும் வகையில் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் தூக்கிலிடும் காட்சி, வீரபாண்டிய கட்டபொம்மன், காளையார் கோவில் கோபுரம், படை தளபதி வீரன் சுந்தரலிங்கம், பூலித்தேவன், ஒண்டி வீரன், வீரத்தாய் குயிலி, மாவீரன் அழகு முத்துக்கோன் உள்ளிட் டோரின் சிலைகள் அடங்கிய அலங்கார வாகன ஊர்தி கலந்து கொண்டது. அந்த வாகனம் சென்னையில் இருந்து மதுரை செல்லும்போது, சிவகங்கை மாவட்ட எல்லை ஆரம்ப மான மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழுதி பட்டியில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு இருந ்தது. இதனை காண பொதுமக்கள் கூடி, அலங்கார வாகன ஊர்தியுடன் செல்பி புகைப்படம் எடுத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து வாகனம் மதுரைக்கு புறப்பட்டது.
Related Tags :
Next Story