ஆபத்தான நிலையில் பாளையக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளி


ஆபத்தான நிலையில் பாளையக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளி
x
தினத்தந்தி 28 Jan 2022 2:10 PM GMT (Updated: 28 Jan 2022 2:10 PM GMT)

ஆபத்தான நிலையில் பாளையக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளி

திருமக்கோட்டை;
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள பாளையக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் மேற்கூரைகள் பெயர்ந்து உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி அதிகாரிகள் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story