காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 28 Jan 2022 8:09 PM IST (Updated: 28 Jan 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, பெருநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவகத்தில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சீபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவகத்தில் விருப்பமனு வழங்க 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாநகராட்சியை பொறுத்தவரை நாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சியில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 688 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 205 பெண் வாக்காளர்களும் இதர 28 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளதாக காஞ்சீபுரம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதில் (கூடுவாஞ்சேரி நகராட்சி புதிதாக தொடங்கப்பட்டது ஆகும்.

இதுபோல் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சரப்பாக்கம் என 6 பேருராட்சிகள் உள்ளன.

1 More update

Next Story