301 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை

301 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை
சுல்தான்பேட்டை,
சுல்தான்பேட்டைஒன்றியம் ஜல்லிபட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, ஜல்லிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஜோதிராஜ் தலைமை தாங்கினார். கோவை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோ முன்னிலை வகித்தார். செஞ்சேரிப்புத்தூர் (பொறுப்பு) கால்நடை உதவி டாக்டர் பிரியதர்ஷினி, லட்சுமிநாயக்கன்பாளையம் கால்நடை உதவி டாக்டர் உமாமகேஷ்வரி, கால்நடை ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் மருத்துவ குழுவினர் 301 கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தற்காலிக மலட்டுதன்மை நீக்கம், சினை ஊசி போடுதல் போன்ற சிகிச்சைகள் அளித்தனர். பின், மாடுகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கலப்பின மாட்டு கன்றுக்கான பரிசு செல்வகுமார், தனலட்சுமி, சரிதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளாக கார்த்திக், செல்வி தேர்வு செய்யப்பட்டனர். இதில், கம்மாளப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.பி.ராமசாமி, ஜல்லிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் பொன்னப்பன், ஜல்லிபட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் செண்பகப் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story