மடப்புரம் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்


மடப்புரம் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 28 Jan 2022 4:02 PM GMT (Updated: 28 Jan 2022 4:02 PM GMT)

ஊரடங்கு தளர்விற்கு பின்னர் கோவில்கள் திறக்கப்பட்டதால் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் சாமி தரிசனத் திற்காக பக்தர்கள் குவிந்தனர்.

திருப்புவனம், 
ஊரடங்கு தளர்விற்கு பின்னர் கோவில்கள் திறக்கப்பட்டதால் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் சாமி தரிசனத் திற்காக பக்தர்கள் குவிந்தனர்.
ஊரடங்கு தளர்வு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அவ்வப்போது தொற்று குறைய தொடங்கிய பின்னர் மீண்டும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் கடந்த 7-ந்தேதி முதல் வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதிக்கப்பட்டது. 
மேலும் தினந்தோறும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு முறையும், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு முறையும் அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
 சாமி தரிசனம்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். மடப்புரம் அடைக்கலம் காத்த அய்ய னார், பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். 
இதையடுத்து காலை முதல் பத்திரகாளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதிய வேளையில் நடை பெறும் உச்சி கால பூஜையின் போது கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 
அனுமதி
மேலும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கட்டாயம் முககசவம் அணிந்துவர கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு கோவில் நுழைவு வாயில் சானி டைசர் தெளித்தும், உடல் வெப்ப பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சி புரம் முத்துமாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில் களில் நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story