திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு


திருவெண்ணெய்நல்லூர் அருகே  அங்காளம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 Jan 2022 4:47 PM GMT (Updated: 28 Jan 2022 4:47 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஏழுமலை என்பவர் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8.30 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

 பின்னர் நேற்று காலை 6 மணிக்கு கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க நகை, வெள்ளி தாலி,  மைக்செட்டுகளுக்கான எலக்ட்ரானிக் கருவிகள், காமிரா ஆகியன திருடு போயிருந்தது. 

மேலும்  கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்ம மனிதர்கள் திருடி சென்றிருந்தனர். இதில் ரூ. 8 ஆயிரம் வரைக்கும் இருந்ததாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்

அதேபோல் கோவில் அருகே ஏழுமலை மகன் மணிகண்டன் என்பவர் தனது வயலில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர். 

இதுகுறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்  தமிழரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

Next Story