கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்; ரூ.55,500 அபராதம்

திருச்சி, ஜன.29-
கொரோனா பரவலை தடுப்பதற்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, ரெயில்களில் பயணிக்க வருவோர் நிலையத்துக்குள் செல்லவும், பயணிகள் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறவும் பிரத்யேக வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்தவும், நடைமேடைகளில் தேவையற்ற வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடைமேடை நுழைவு சீட்டுகளை பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டு பறக்கும் படையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1-ந் தேதி முதல் இதுவரையிலான காலக்கட்டத்தில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் முக கவசங்கள் அணியாத வகையில் 110 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.55,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100, ரூ.200 அபராதம் என வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story