புகார் பெட்டி

புகார் பெட்டி
பணி முடிக்கப்படுமா?
ஈரோடு கனிராவுத்தர்குளத்தில் இருந்து வில்லரசம்பட்டி செல்லும் வழியில் சூரிபாறை என்ற இடத்தில் ரோட்டோரம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் பணியை பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் அந்த குழி மூடப்படாமல் திறந்த நிலையிலேயே கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தவறி குழிக்குள் விழுந்து விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே உடனே பணியை முடித்து குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனசீலன், எல்லபாளையம்.
தார்சாலை அமைக்கப்படுமா?
அந்தியூர் அருகே உள்ளது எண்ணமங்கலம் செங்காடு பகுதி. இங்குள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றுவதற்காக குழி தோண்டப்பட்டு பல மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆகவே தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூபதி, அந்தியூர்.
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
அந்தியூரில் இருந்து மைக்கேல்பாளையம் செல்லும் ரோட்டின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து ரோட்டை மறைத்தபடி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.வி.அருள், அந்தியூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு சத்தி ரோட்டில் இருந்து தியேட்டருக்கு செல்லும் வழியில் குப்பைகள் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், ஈரோடு.
வீணாகும் குடிநீர்
ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லே-அவுட் பகுதியில் இருந்து செல்லும் ரோட்டில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொது மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்படுகிறார்கள். உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கொடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
Related Tags :
Next Story