வடமாடு மஞ்சுவிரட்டு


வடமாடு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 29 Jan 2022 1:44 PM GMT (Updated: 29 Jan 2022 1:44 PM GMT)

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

காரைக்குடி, 
தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
17 காளைகள்
அ.தி.மு.க பொன்விழாவையொட்டி தேவகோட்டை அருகே சருகணியில் அ.தி.மு.க சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 17 காளைகள் கலந்துகொண்டன. நிகழ்ச்சியில் ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு அதில் மொத்தம் 9 வீரர்கள் கலந்துகொண்டு களத்தில் இறங்கினர். 
முன்னதாக களத்தில் இறங்ககும் காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அதன் பின்னர் களத்தில் இறக்கிவிடப்பட்டது. இதில் ஒவ்வொரு காளையாக வடத்தில் கட்டப்பட்டு விளையாட விடப்பட்டது. இதில் ஒரு சில காளைகள் ஆரம்பத்தில் சீறி பாய்ந்து சென்ற நிலையில் அதன் பின்னர் வீரர்களிடம் பிடிப்பட்டது. 
பரிசு
சில காளைகள் வீரர்களுக்கு பிடிபடாமல் போக்கு காட்டிய படி தொடர்ந்து சீறிபாய்ந்து சென்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு குத்துவிளக்கு, பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முருகன், தசரதன், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன், இளைஞர் இளம்பெண் பாசறை பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் ஆரோக்கியராஜா உள்பட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் ஏராளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story