2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நீலகிரியில் 15 இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெற நியமனம் செய்யப்பட்டனர்.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் சிலர் வேட்புமனுக்களை வாங்கி சென்றனர். வருகிற 31-ந் தேதி முதல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story