2-வது நாளில் ஒருவர் வேட்பு மனு தாக்கல்


2-வது நாளில் ஒருவர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:00 PM GMT (Updated: 29 Jan 2022 5:00 PM GMT)

வேதாரண்யம் நகராட்சியில் 2-வது நாளில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வெளிப்பாளையம்,:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19- ந்தேதி நடக்கிறது.. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று 2-வது நாளில் வேதாரண்யம் நகராட்சி 13-வது வார்டில் சுயேச்சையாக ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாகை நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

Next Story