முடசல்ஓடை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


முடசல்ஓடை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 29 Jan 2022 5:25 PM GMT (Updated: 29 Jan 2022 5:25 PM GMT)

கடல் சீற்றம் காரணமாக முடசல்ஓடை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

பரங்கிப்பேட்டை, 

மன்னர் வளைகுடா கடல் பகுதியில் காற்று அதிகம் வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, முடசல்ஓடை, அண்ணன்கோவில், சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, குமாரப்பேட்டை, பேட்டோடை, பெரியகுப்பம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, முழுக்குதுறை, எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு, கண்ணகிநகர், பட்டறையடி, சின்னவாய்க்கால் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. 

 மேலும் அவர்கள் தங்களுடைய படகுகளை அந்தந்த பகுதியில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அண்ணன்கோவில், எம்.ஜி.ஆர். திட்டு, முடசல் ஓடை ஆகிய மீன் ஏலம் விடும் தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story