அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடம்


அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடம்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:47 PM GMT (Updated: 29 Jan 2022 5:47 PM GMT)

சேத்துப்பட்டில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அலவலர் பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அரசுக்கு சொந்தமான இடத்தை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக நலத்துறை தாசில்தார் குமாரசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உடனிருந்தனர். 

முன்னதாக சேத்துப்பட்டு தாசில்தார் அலுவலக வளாகத்தில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு  திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

Next Story