டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம்


டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம்
x
தினத்தந்தி 29 Jan 2022 6:00 PM GMT (Updated: 29 Jan 2022 6:00 PM GMT)

டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.

ராமேசுவரம், 
ராமேசுவரம் பகுதியில் சேவாபாரதி அமைப்பின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபுரவாசல் பகுதியிலிருந்து 800 லிட்டர் கொள்ளளவு உடைய சிறிய தண்ணீர் டேங்கில் முழுவதுமாக நிலவேம்பு கசாயம் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியானது சேவாபாரதி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முனியசாமி தலைமையில் மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், மாவட்ட செயலாளர் சாமிநாதன், நகர் தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர் ஜெயகாந்தன், முன் களப்பணியாளர் இருளாண்டி,ராமகிருஷ்ண தபோவன சுவாமி நியமானந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலவாசல் பகுதியில் இருந்து தொடங்கிய நிலவேம்பு கசாயம் டேங்கர் வண்டியானது கோவில் ரத வீதியை சுற்றிலும் வலம் வந்தபடி ரதவீதி சாலை வழியாக நடந்து வந்த ஏராளமான பக்தர்களுக்கும் நிலவேம்பு கசாயம் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வர்த்தகன்தெரு, நடுத்தெரு திட்டக்குடி சந்திப்பு சாலை, தேவர் சிலை, வேர் கோடு உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வீட்டின் வாசலுக்கு நேரடியாக வந்து கொடுக்கப்பட்ட நிலவேம்பு கசாயத்தை ஏராளமான பொதுமக்களும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஆர்வத்தோடு வாங்கி குடித்தனர்.

Next Story