விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 29 Jan 2022 6:08 PM GMT (Updated: 29 Jan 2022 6:08 PM GMT)

ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட முயன்ற முயற்சி பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.

மயிலாடுதுறை:
ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட முயன்ற முயற்சி பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.
சாைல மறியலில் ஈடுபட முயற்சி
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆன்லைன் மூலம் பதிவு முறையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதனையடுத்து நேற்று காலை சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆன்லைன் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டாலும், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல்லை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தனர். 
மேலும் விவசாயிகளின் சில கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை நேற்று கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story