கார் மோதி பெண் பலி


கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 29 Jan 2022 6:50 PM GMT (Updated: 29 Jan 2022 6:50 PM GMT)

விளாத்திகுளம் அருகே கார் மோதி பெண் பலியானார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி மாரீஸ்வரி (வயது 38). இவர் வெம்பூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மாரீஸ்வரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நூற்பாலை நிர்வாகத்தினர் தங்களது வாகனம் மூலம் மாரீஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த கனீத் ஏசியன் (33) என்பவரை கைது செய்தனர்.

Next Story