29 ஆயிரத்து 216 பேர் வாக்களிக்க உள்ளனர்


29 ஆயிரத்து 216 பேர் வாக்களிக்க உள்ளனர்
x
தினத்தந்தி 29 Jan 2022 8:07 PM GMT (Updated: 29 Jan 2022 8:07 PM GMT)

வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு ஆகிய பேரூராட்சிகளில் 29 ஆயிரத்து 216 பேர் வாக்களிக்க உள்ளனர்.

சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு ஆகிய பேரூராட்சிகளில் 29 ஆயிரத்து 216 பேர் வாக்களிக்க உள்ளனர்.
வைத்தீஸ்வரன்கோவில்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 235 பேரும், பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 309 பேரும், ஆக மொத்தம் 6 ஆயிரத்து 544 வாக்காளர்கள் உள்ளனர். வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 6, 8, 9, 10, 14 ஆகிய 5 வார்டுகள் பொது வார்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 1, 4, 5, 11, 12, 15 ஆகிய 6 வார்டுகள் பொது பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஆதிதிராவிடர்களுக்ககான பொது வார்டுகளாக 2, 3 ஆகிய வார்டுகளும், ஆதிதிராவிடர் பெண்களுக்காக 7, 13 ஆகிய வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பொது ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குத்தாலம்
இதேபோல குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 15 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 7,086 பேரும், பெண் வாக்காளர்கள் 7,510 பேரும், ஆகமொத்தம் 14,596 வாக்காளர் உள்ளனர். 
குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம் பேரூராட்சிகளில் 21 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க உள்ளனர்.
மணல்மேடு
இதேபோல மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மொத்தம் 8 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 85 பேரும், பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 990 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் உள்ளனர். ஆதிதிராவிடர் பெண்களுக்கு 3 வார்டுகளும், ஆதிதிராவிடர் பொது 3 வார்டுகளும், பெண்கள் பொது 5 வார்டுகளும், ஆண், பெண் பொது 4 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story