மானாமதுரை போலீஸ் நிலையம் தேர்வு


மானாமதுரை போலீஸ் நிலையம் தேர்வு
x
தினத்தந்தி 30 Jan 2022 4:17 PM GMT (Updated: 30 Jan 2022 4:17 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக மானாமதுரை காவல் நிலையம் தேர்வு பெற்று உள்ளது.

மானாமதுரை, 
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக மானாமதுரை காவல் நிலையம் தேர்வு பெற்று உள்ளது.
சுற்றுப்புறம்
2020-ம் ஆண்டிற்கான தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையம் பொதுமக்களை வரவேற்பது, சுற்றுப்புறத்தை அழகுப்படுத்தி தூய்மையாக வைத்திருப்பது, வழக்குகளை விரைந்து முடிப்பது குற்ற செய்லகளை உடனுக்குடன் தடுப்பது குற்ற செயல்களுக்கு உடனடியாக தண்டனை பெற்று தருவது, ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது உள்ளிட்டவைகளுக்கு மதிப்பெண் கொடுத்து சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சட்டம்- ஒழுங்கு
இதுகுறித்து மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் கூறியதாவது:- சிறந்ததாக மானாமதுரை காவல் நிலையம் தேர்வு செய்யபட்டது பெருமையாக இருந்தாலும். மக்களுக்கான பணிகளை செய்வதில் எப்போதும் திறம்பட பணியாற்றி உள்ளோம். அது எங்கள் கடமையும்கூட சட்டம்-ஒழுங்கை பேணி பாதுகாப்பதில் உறுதியாக இருந்து உள்ளோம்.
 மேலும் குற்ற செயல்களுக்கு தண்டனையை உடனுக்குடன் பெற்று தந்து உள்ளோம். குண்டர் சட்டத்தின்கீழ் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளோம். தொடர்ந்து மக்களுக்கான பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.

Next Story