அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை திமுக வினர் முற்றுகை


அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை திமுக வினர் முற்றுகை
x
தினத்தந்தி 30 Jan 2022 4:18 PM GMT (Updated: 30 Jan 2022 4:18 PM GMT)

கூட்டணி கட்சிக்கு 2 வார்டுகளை ஒதுக்கியதால், அமைச்சர் செந்தில்பாலாஜியின் காரை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.

கோவை

கூட்டணி கட்சிக்கு 2 வார்டுகளை ஒதுக்கியதால், அமைச்சர் செந்தில்பாலாஜியின் காரை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.

2 வார்டுகள் ஒதுக்கீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு ெதாகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாநகராட்சி யில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 18 மற்றும் 54-வது வார்டுகள் தி.மு.க. கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 

இதற்கு அந்த வார்டு பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை தொடங்கி வைக்க தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வந்திருந்தார்.

காரை முற்றுகையிட்டனர்

நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பும் போது கோவை மாநகராட்சி 18 மற்றும் 54-வது வார்டுகளை சேர்ந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று அமைச்சரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். 

பின்னர் அவர்கள் தி.மு.க.வினருக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அமைச்சரிடம் முறையிட்டனர். இது குறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

முன்னதாக மருத்துவமனையில் 3 நுழைவுவாயில்களிலும் தி.மு.க. வினர் அமைச்சரின் காரை முற்றுகையிட திரண்டு நின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தனர். 

இருந்தாலும் அமைச்சர் காரில் வந்தபோது அவரை தி.மு.க.வினர் முற்றுகை யிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story