தூத்துக்குடி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்


தூத்துக்குடி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2022 4:23 PM GMT (Updated: 30 Jan 2022 4:23 PM GMT)

அசாதாரண நுணணறிவு திறனுக்காக தூத்துக்குடி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம் கிடைத்துள்ளது

தூத்துக்குடி:
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் அசாதாரண நுண்ணறிவு திறன் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. நுண்ணறிவு பிரிவு புலனாய்வு தகவல்களை சேகரித்தல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு (எஸ், பி. சி.ஐ.டி) ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு (ஓ.சி.ஐ.யு) கியூ பிராஞ்ச், சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.யு) உள்ளிட்ட பல்வேறு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, இந்த பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி, சான்றிதழில் கையொப்பமிட்டு வழங்குகிறார். தமிழகத்தில் முதன்முறையாக நான்கு பிரிவுகளில் உள்ள 11 அதிகாரிகளுக்கு இந்த பதக்கம் சான்றிதழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நெல்லை (எஸ்.பி சி.ஐ.டி./ எஸ்.ஐ.யு) சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story