தஞ்சை மாணவியின் தாத்தா பாட்டியிடம் கோவையில் போலீசார் விசாரணை


தஞ்சை மாணவியின் தாத்தா பாட்டியிடம் கோவையில் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Jan 2022 4:40 PM GMT (Updated: 2022-01-30T22:10:11+05:30)

சித்தி கொடுமை செய்ததாக புகார் அளித்ததை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாணவியின் தாத்தா- பாட்டியிடம் கோவையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கோவை

சித்தி கொடுமை செய்ததாக புகார் அளித்ததை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாணவியின் தாத்தா- பாட்டியிடம் கோவையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

மாணவி தற்கொலை

தஞ்சை அருகே உள்ள மைக்கேல்பட்டி பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி லாவண்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

மதமாற்றம் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

கோவை சரவணம்பட்டியில் உள்ள எழில் நகரில் மாணவியின் பாட்டி நித்யானந்த சரஸ்வதி (வயது 60), தாத்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். 

பாட்டி பேட்டி

இந்த நிலையில் நித்யானந்த சரஸ்வதி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், லாவண்யாவின் தாய் கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதனால் லாவண்யா தஞ்சையில் உள்ள பள்ளி விடுதியில் தங்க வைக்கப் பட்டார். 

கடந்த ஆண்டு அவரது சித்தி லாவண்யாவின் கன்னத்தில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக லாவண்யாவின் தோழிகள் தனக்கு தெரிவித்தார்கள். நான் இது குறித்து சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவித்தேன்.

 சைல்டுலைன் ஊழியர் கள் எனது பேத்தியை சந்தித்தபோது சித்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார் என தெரிவித்து இருந்தார்.

கோவையில் விசாரணை

இதை தொடர்ந்து மாணவியின் பாட்டியிடம் விசாரணை நடத்து வதற்காக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் கோவை சரவணம் பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். 

பின்னர் அவர்கள் எழில் நகருக்குச் சென்று நித்யானந்த சரஸ்வதியையும், அவரது கணவரையும் விசாரணைக்காக சரவணம்பட்டி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வைத்து 2 பேரிடமும் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. 

ஆஸ்பத்திரியில் அனுமதி

விசாரணையில் மாணவியின் உறவினர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அவர் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு லாவண்யாவை சந்தித்து பேசி உள்ளார். 

எனவே. அவரிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர். பின்னர் அவர் யூடியூப் சேனலில் கூறியதை போலீசார் வாக்கு மூலமாக வீடியோ எடுத்தனர். அப்போது நித்யானந்த சரஸ்வதி திடீரென்று தனக்கு தலைசுற்றுவதாக போலீசாரிடம் கூறினார். 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நித்யானந்த சரஸ்வதியை சந்தித்த போலீசார், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று தெரிவித்துவிட்டு சென்றனர். 


Next Story