மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி


மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 30 Jan 2022 4:44 PM GMT (Updated: 30 Jan 2022 4:44 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி சிவகங்கையில் நடைபெற்றது.

சிவகங்கை, 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி சிவகங்கையில் நடைபெற்றது.
தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணி மேற்கொள்ளும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, வாக்குப்பதிவு மைய அலுவ லர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு தற்போது பயிற்சி வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டல அலுவலர்களும் 10 வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பயிற்சி
 அந்தவகையில் ஒவ்வொரு மண்டல அலுவலரும் வாக்குப் பதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாடுகள் குறித்து தற்பொழுது நடைபெறும் பயிற்சியில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வாக்குப் பதிவு நாளன்று, வாக்குப்பதிவு மையங்களில் ஏதேனும் வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களில் குறைபாடுகளோ அல்லது இயந்திரங்கள் இயக்கம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக தொழில்நுட்ப பொறியாளரை தொடர்பு கொண்டு உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். எந்தவகையிலும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்காளரிடம் அறிவுரை வழங்குதல், விளக்கம் அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 
முழுகவனம்
வாக்குப்பதிவு நாளன்று பணி மேற்கொள்ளும் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு தலின்படி பணிகளை மேற்கொண்டு நல்லமுறையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும், வாக்குப்பதிவு நிறைவு பெற்றததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் வரை முழுக்கவனமுடன் செயல்பட்டு முழுமை யான முறையில் தேர்தல் நடைபெற்றது என்ற நிலைப் பாட்டை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்  பேசினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் லோகன், உதவி இயக்குனர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story