மின்சார ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்


மின்சார ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2022 5:21 PM GMT (Updated: 30 Jan 2022 5:21 PM GMT)

மானாமதுரை-ராமநாதபுரம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார ரெயில் பாதையில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம், 
மானாமதுரை-ராமநாதபுரம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார ரெயில் பாதையில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மின்பாதை 
மதுரை - ராமநாதபுரம் இடையே 107 கிலோ மீட்டர் நீளமுள்ள அகல ெரயில் பாதையில் மின்சார மயமாக்கும் திட்டத்தில் முதல்கட்டமாக 47 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை-மானாமதுரை இடையே பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மானாமதுரை - ராமநாதபுரம் இடையே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த வழித்தடத்தில் பெங்களூரு தென்சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதன்பின்னர் ராமநாதபுரத்திலிருந்து மானாமதுரை வரை மின்சார ரெயில்பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 
சோதனை ஓட்டம் 
இந்தசிறப்பு ரெயிலில் தென்சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மற்றும் முதன்மை பொறியாளர் மேத்தா, கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக சோதனை ஓட்ட ரெயிலுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனை ஓட்ட ஆய்விற்கு முன்னதாக தென்சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரத்தில் இருந்து மானாமதுரைக்கு மின்சார ரெயில்பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றதையொட்டி வழித்தட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ரெயில் பாதை அருகில் குடியிருப்போர் ெரயில் பாதையை கடக்காமல் கண்காணிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

Next Story