உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை: செங்கல்பட்டு விதை ஆய்வு அதிகாரி

சென்னை விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெ.ரவீந்திரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உரிமம் பெறாமலும், விற்பனைபட்டியல் இல்லாமலும், விதை விவர அட்டை இல்லாமலும் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர் தாங்கள் விற்கும் புதிய ரக விதைகளுக்கு சான்று பெற்றிருக்கவேண்டும். மேலும் பதிவு எண் மற்றும் முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் விதை சட்டம் 1965-படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விதைகளை வாங்கும்போது விதை சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும்.
மேலும் உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தாலோ, போலி விதைகளை விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தகுந்த உரிமம் பெறாமல் விற்பனை செய்துவரும் நிறுவனங்கள் தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அணுகி (seedcertification.tn.gov.in) என்ற வலைதள முகவரியில் முறையாக விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story






