மறைமலைநகரில் லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி


மறைமலைநகரில் லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி
x
தினத்தந்தி 31 Jan 2022 12:03 PM GMT (Updated: 2022-01-31T17:33:37+05:30)

மறைமலைநகரில் லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புழுதிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 39). லாரி டிரைவரான இவர், நேற்று அதிகாலை 4 மணிக்கு மறைமலைநகர் அருகே சாலை ஓரமாக லாரி நிறுத்திவிட்டு கீழே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லாரி டிரைவர் வேலுவை கத்தியால் தலையில் வெட்டி விட்டு அவரிடமிருந்து ஒரு செல்போன், ரூ.3 ஆயிரத்தை பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் தப்பிச் சென்றது. காயமடைந்த வேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மறைமலைநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து லாரி டிரைவர் வேலு மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story