டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் திருட முயற்சி


டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் திருட முயற்சி
x
தினத்தந்தி 31 Jan 2022 4:18 PM GMT (Updated: 31 Jan 2022 4:18 PM GMT)

கீழ்வேளூரில் டாக்மாக் கடையில் மர்ம நபர்கள் திருட முயன்றனர். ஷட்டரில் பூட்டை உடைக்க முடியாததால் ரூ.2¼ லட்சம் தப்பி உள்ளது.

சிக்கல்:
கீழ்வேளூரில் டாக்மாக் கடையில் மர்ம நபர்கள் திருட முயன்றனர். ஷட்டரில் பூட்டை உடைக்க முடியாததால் ரூ.2¼ லட்சம் தப்பி உள்ளது. 
டாஸ்மாக் கடை
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள கச்சனம் சாலையில் ெரயில்வே கேட் அருகே டாஸ்மாக்  கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக பாஸ்கரன் (வயது 52) என்பவரும்,  விற்பனையாளராக நந்தகோபாலன், தேவதாஸ் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். 
 இவர்கள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனையை முடித்து விட்டு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். 
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் டாஸ்மாக் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது
 இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் மேற்பார்வையாளர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவர் டாஸ்மாக் கடைக்கு வந்து பார்த்த போது ஷட்டரில் இருந்த 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளன. மேலும் மற்றொரு பூட்டு உடைக்கப்படாமல் இருந்துள்ளது. 
இதை தொடர்ந்து அவர் கடைக்குள் சென்று பார்த்த போது மதுபாட்டில்கள் விற்ற ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மற்றும் மதுபாட்டில்கள் திருட்டு போகாமல் இருந்துள்ளது.
ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் தப்பியது
டாஸ்மாக்  கடை ஷட்டரில் இருந்த 2 பூட்டுகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். பின்னர் 3-வது பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியாததால் மர்மநபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைக்குள் இருந்த ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மற்றும் மதுப்பாட்டில்கள் தப்பின. 
இதுகுறித்து பாஸ்கரன் கீழ்வேளூர் ‌போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story