செல்போன் திருடிய வாலிபர் கைது


செல்போன் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2022 4:40 PM GMT (Updated: 2022-01-31T22:10:46+05:30)

செல்போன் திருடிய வாலிபர் கைது

காங்கேயம்:
காங்கேயம் அருகே முள்ளிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது30). இவர் காங்கேயம் அருகே சின்னஇல்லியம் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கணக்கராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் மில்லில் உள்ள ஓய்வெடுக்கும் அறையில் கதவை சாத்தி விட்டு செல்போனை பக்கத்தில் வைத்து விட்டு ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு நபர் அங்கு வந்து ரஞ்சித்தின் செல்போனை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதை பார்த்த ரஞ்சித் சத்தம் போட்டுக்கொண்டு அந்த நபரை துரத்தி உள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் காங்கேயம் நகரம், திருப்பூர் சாலையை சேர்ந்த குமரேசன் (26) என்பதும், செல்போனை திருடிகொண்டு ஓடியதும் தெரியவந்தது. பின்னர் உடனடியாக அந்த வாலிபரை காங்கேயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காங்கேயம் போலீசார் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்தனர்.

Next Story