பேரூர் நொய்யல் படித்துறையில் தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு

தை அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் படித்துறையில் பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
பேரூர்
தை அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் படித்துறையில் பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
நொய்யல் படித்துறை
கோவையை அடுத்த பேரூரில் நொய்யல் படித்துறை உள்ளது. முக்தி தலம் என்று அழைக்கப்படும் இங்கு இறந்துபோன முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், அவர்கள் ஈசனிடம் சென்றுவிடுவார்கள் என்பதும் ஐதீகம்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும், தை அமாவாசையையொட்டி, நொய்யல் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு அரிசி, காய்கறிகள், எள்சாதம், பழம், கற்பூரம் உள்ளிட்ட படையல் வைத்து திதி மற்றும் தர்ப்பண வழிபாடு செய்வது வழக்கம்.
பக்தர்கள் வழிபாடு
அதன்படி தை அமாவாசை என்பதால், கோவையை அடுத்த பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் காலை 6 மணி முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தற்போது படித்துறையில் உடைந்த படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி நடப்பதால், அங்கு யாரும் தர்ப்பணம் செய்யவில்லை.
இதனால் அதன் அருகே நொய்யல் பாலத்தின் இருபுறத்திலும் ஆற்றுக்குள் பக்தர்கள் இறங்கி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்பண வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து சிலர் அங்குள்ள கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை யும், அங்கு இருந்த சாதுக்களுக்கு அன்னதான பொட்டலங்களை யும் வழங்கினார்கள்.
சாமி தரிசனம்
தொடர்ந்து பக்தர்கள் பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததுடன், நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். கொரோனா பரவலை தடுக்க படித்துறையில் பக்தர்கள் தர்ப் பணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அவர்களை யாரும் தடுக்கவும் இல்லை. அதுபோன்று பேரூர் பட்டீசுவரர் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story






