கோவையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள்

கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.
கோவை
கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப் பட்டன. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டதால் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.
இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ்.குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தில் உள்ள 2040 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
மாணவர்கள் மகிழ்ச்சி
அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டதுடன், கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. அத்துடன் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுபோன்று மாணவர்கள் வகுப்பறையில் சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து இருந்தனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சக மாணவர்களை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். முதல் நாளான 90 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது.
அதுபோன்று தொடக்கப்பள்ளியில் படித்து வரும் மாணவ குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அடம் பிடித்து அழுதனர். அவர்களை பெற்றோர் சமாதானப்படுத்தி பள்ளிகளில் விட்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா கூறியதாவது:-
அரசு வழிகாட்டு நெறிமுறைகள்
பள்ளிகள் திறக்கப்பட்டதால் 90 சதவீத மாணவ-மாணவி கள் வந்தனர். கொரோனா பரவி வருவதால் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளுக்கு வரக்கூடாது. மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலையை சோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






