ஆனைமலை அரசு பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி

ஆனைமலை வி.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆனைமலை
ஆனைமலை வி.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களுக்கு தொற்று
கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஆனைமலை வி.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகள் திறப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பள்ளியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.
மேலும் அறிகுறி உள்ள நபர்கள் மற்றும் தொற்று பாதித்த ஆசிரியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளி திறந்த 2 நாட்களில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெற்றோர்கள், மாணவிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
சுழற்சி முறையில் வகுப்புகள்
ஆனைமலை வி.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,365 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 36 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 8 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது பாடம் நடத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் உள்ளனர். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக வி.டி.ஆர். பள்ளி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சில வகுப்பறைகளை வாக்கு எண்ணிக்கைக்கு ஒதுக்க வேண்டிய உள்ளது. இதன் காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் முழுநேரமும், மற்ற வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
160 பேருக்கு தொற்று
பொள்ளாச்சி நகராட்சியில் 13 பேர், வடக்கு ஒன்றியத்தில் 15 பேர், தெற்கு ஒன்றியத்தில் 37 பேர், கிணத்துக்கடவில் 60 பேர், சுல்தான்பேட்டையளில் 7 பேர், ஆனைமலையில் 28 பேர் என்று பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 160 பேருக்கு கொரோனா உறுதியானது.
அதுபோன்று சுல்தான்பேட்டை பகுதியில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 501 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 320 பேர் கொரோனாவுக்கு குணம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






