குன்றத்தூரில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து திருட்டு

குன்றத்தூரில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று கல்லா பெட்டிகளை ஆராய்ந்து திருடி சென்றது தெரியவந்தது.
குன்றத்தூரை அடுத்த மணிகண்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதா. அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல் சூப்பர் மார்க்கெட்டை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் கடையில் இருந்த பூட்டுகளை உடைத்து கடைக்குள் சென்று கல்லா பெட்டிகளை ஆராய்ந்து அதில் இருந்து ரூ.7 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் அதற்கு அருகிலேயே இருந்த மற்றொரு சூப்பர் மார்க்கெட்டில் திருட முயன்றபோது அங்கு 2 இரும்பு கேட்டுகளில் பூட்டப்பட்டிருந்ததால் அவர் அதனை உடைக்காமல் அப்படியே நடந்து சென்று விட்டார். மேலும் பக்கத்து தெருவில் இருந்த ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர் அந்த கடையில் பணம் எதுவும் இல்லாததால் விரக்தியுடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






