வால்பாறையில் ஆறுகள் நீரோடைகள் வறண்டன

வால்பாறையில் முன்கூட்டியே கோடைகாலம் தொடங்கியது. இதனால் பகலில் வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகள், நீரோடைகள் வறண்டன.
வால்பாறை
வால்பாறையில் முன்கூட்டியே கோடைகாலம் தொடங்கியது. இதனால் பகலில் வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகள், நீரோடைகள் வறண்டன.
வால்பாறை
மலைப்பிரதேசமான வால்பாறையில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் முடிந்ததும், அதே மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும்.
இந்த மழை நவம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் இறுதிவரை நீடித்தது. இதன் காரணமாக வால்பாைறயில் உள்ள சோலையார் அணை, நீரார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தன.
கூழாங்கல் ஆறு, கருமலை ஆறு, பச்சைமலை ஆறு, சின்னக்கல்லார் ஆறு, சோலை யார் சுங்கம் ஆறு, வாழைத்தோட்டம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.
நீர்நிலைகள் வறண்டன
இதன் காரணமாக பச்சை பசேல் என்று காணப்பட்டது. மேலும் வால்பாறையில் வழக்கமாக மார்ச் மாதம் இறுதியில்தான் கோடைகாலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டில் தற்போதே கோடைகாலம் தொடங்கிவிட்டது. பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.
மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் வற்றி ஆங்காங்கே குட்டைகள் போன்று காட்சியளிக்கிறது. குறிப்பாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரும் கருமலை ஆறு, பச்சைமலை ஆறு, கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் ஆறு ஆகிய ஆறுகள் வறண்டு ஆங்காங்கே குட்டைகள் போன்று தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கோடைகாலம் தொடங்கியது
இந்த வறட்சி காரணமாக தேயிலை செடிகள் காய்ந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வால்பாறையில் வழக்கமாக மார்ச் மாதம் கடைசியில்தான் கோடைகாலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டில் காலநிலை மாற்றம் காரணமாக முன்கூட்டியே இந்த மாதம் முதல் வாரத்திலேயே தொடங்கி உள்ளது.
வெயிலின் தாக்கம்
வழக்கமாக 50 டிகிரி முதல் 60 வரை வெயில் பதிவாகி இருக்கும். ஆனால் நேற்று 77 டிகிரி இருந்தது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வால்பாறையில் வெயில் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்து இருக்கிறது.
வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வரத்தொடங்கி உள்ளது. எனவே வனத்துறையினர் இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






