கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை


கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை
x
தினத்தந்தி 3 Feb 2022 11:03 PM IST (Updated: 3 Feb 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கொலை, கொள்ளை வழக்கில் கைது

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர் வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கோவை மத்திய சிறையில் உள்ள  9-வது பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர், கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

அவர்  இரவு வழக்கம் போல் உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அவர் அதிகாலை 4.30 மணியளவில்  சிறையின் இரும்புக்கதவு கம்பியில் தனது லுங்கியில் தூக்கு மாட்டி தொங்கினார்.

விசாரணை

அப்போது கழுத்து இறுகியதால் அவர் கூச்சலிட்டார். உடனே சக கைதிகள் விழித்துக் கொண்டு அவரை காப்பாற்ற முயன்றனர். இது குறித்த தகவலின் பேரில் சிறை அதிகாரிகள் அதிகாரிகள் விரைந்து சென்று சக்திவேலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். 

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1 More update

Next Story