கோவை மாநகராட்சி பகுதிகளில் திமுக வினர் போராட்டம்


கோவை மாநகராட்சி பகுதிகளில் திமுக வினர் போராட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2022 11:07 PM IST (Updated: 3 Feb 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சியில் வார்டு ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியல் செய்த 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை

கோவை மாநகராட்சியில் வார்டு ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியல் செய்த 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க.வினர் போராட்டம்

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களை கட்ட தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து தங்களின் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். 

ஆனால் கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கியது, கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றியவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று கூறி பல்வேறு கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் தி.மு.க. கட்சியில் கோவை மாநகராட்சி 26-வது வார்டை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீளமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

 இதுபோன்று 38-வது வார்டை மாற்று வேட்பாளர் ஒருவருக்கு வழங்கியதாக கூறி பீளமேடு எல்லைத்தோட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

மாநகராட்சி 77-வது வார்டில் தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி செல்வபுரத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை அறிந்த செல்வபுரம் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 தி.மு.க.வினரை கைது செய்தனர். இதுதவிர 84-வது வார்டை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்கடம் பகுதியில் தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் 20 பேரை உக்கடம் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

மேலும் ஒத்தக்கால்மண்டம் பேரூராட்சி 4-வது வார்டில் ஒதுக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

1 More update

Next Story