கோவையில் 1426 பேருக்கு கொரோனா


கோவையில் 1426 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Feb 2022 11:16 PM IST (Updated: 3 Feb 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 1426 பேருக்கு கொரோனா

கோவை

கோவை மாவட்டத்தில்  1,426 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3 லட்சத்து 19 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல, கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 3,126 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது, 62 வயது முதியவர்கள், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதனால் மாவட்டதில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 931 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story