ரூ.43 ஆயிரம் பறிமுதல்
ரூ.43 ஆயிரம் பறிமுதல்ரூ.43 ஆயிரம் பறிமுதல்
வால்பாறை
வால்பாறையில் பறக்கும் படை அதிகாரிகள் (முதல் குழுவினர்) துணை தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் நேற்று ஸ்டேன்மோர், குரங்குமுடி, பழைய வால்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்டேன்மோர் எஸ்டேட் குரங்குமுடி பிரிவு பகுதியில் நின்றிருந்த தி.மு.க.வை சேர்ந்த இரண்டுபேர், வேட்பு மனுதாக்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கட்சி ஆதரவாளர்களுக்கு வேட்பாளரின் சார்பில் செலவுக்காக பணம் பட்டுவாடா செய்துள்ளனர்.
இதனை பார்த்த பறக்கும்படையினர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.43 ஆயிரத்து 300-ஐ பறிமுதல் செய்து வால்பாறை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story






